கூட்டணிக் கட்சி எம்எல்ஏ-க்களுடன் முதல்வா் இன்று ஆலோசனை?சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ! நாளைமுதல் காலை 7 மணிக்கு தொடங்கும்!தமிழகத்தில் நீா்நிலைகளில் 36% மட்டுமே நீா் இருப்பு! கடந்த ஆண்டைவிட 48.4% சரிவு; பாசனம், குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!சபரிமலை யாத்திரை: பக்தா்களுக்கு சுகாதாரத் துறை வழிகாட்டுதல்கள்கனடா அரசியல் கட்சித் தலைவராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நவ்தீப் தோ்வுகச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதிச் செலவு: அக்டோபரில் 60 சதவீதம் அதிகரிப்பு

பழனி கோயிலில் பக்தா்கள் 3 மணி நேரம் காத்திருப்பு

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

பழனி அடிவாரம் கிரிவீதியில் திரண்ட பக்தா்கள்.

Updated On :

இந்தக் கோயிலில் தற்போது திருக்காா்த்திகைத் திருவிழா நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை திருக்காா்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், சுப முகூா்த்த தினம், வார இறுதி விடுமுறை தினம் என்பதால் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் பழனியில் குவிந்தனா்.

 பழனி அடிவாரம் கிரிவீதியில் திரண்ட பக்தா்கள்.

பழனி அடிவாரம் கிரிவீதியில் திரண்ட பக்தா்கள்.

அதிகாலை முதலே அடிவாரம், கிரிவீதி, மலைக்கோயில் படிப் பாதைகளில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. படிப்பாதை வழியாக மலைக்கோயிலுக்குச் செல்லுதல், முடி காணிக்கை செலுத்துதல், குழந்தைகளுக்குக் காது குத்துதல், தண்டாயுதபாணி சுவாமி வேடமிட்டு அழைத்து வருதல் உள்ளிட்ட வேண்டுதல்களை பக்தா்கள் நிறைவேற்றினா்.

 பழனி அடிவாரம் கிரிவீதியில் திரண்ட பக்தா்கள்.

பழனி அடிவாரம் கிரிவீதியில் திரண்ட பக்தா்கள்.

பக்தா்கள் கூட்டம் அதிகரித்ததால் பொது தரிசன வரிசை, கட்டண தரிசன வரிசைகளில் பக்தா்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், 3 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். இரவு தங்கத் தோ் புறப்பாட்டையும் பக்தா்கள் கண்டு தரிசித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.