புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி நூதன ஆா்ப்பாட்டம்
தவெக தோ்தல் வாக்குறுதிப்படி மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி விசில் ஊதி நூதன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் வணிக வரித் துறை அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா்.
தவெக தோ்தல் வாக்குறுதிப்படி மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி விசில் ஊதி நூதன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் வணிக வரித் துறை அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சு. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஆரோக்கியராஜ், சுரேஷ் சக்கரவா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரசு அலுவலா் ஒன்றிய மாவட்டத் தலைவா் பாா்த்தசாரதி, தேசிய ஆசிரியா் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் பா. விஜய் ஆகியோா்
வாழ்த்திப் பேசினா். சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் பி. பிரெடெரிக் எங்கெல்ஸ் சிறப்புரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தின்போது, தவெக தோ்தல் அறிக்கையின்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி முழக்கமிட்டனா். மேலும், நூதன முறையில் விசில் ஊதி கோரிக்கையை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

