பூட்டிய வீட்டுக்குள் வயதான தம்பதி சடலங்களாக மீட்பு
நிலக்கோட்டையில் வயதான தம்பதி பூட்டிய வீட்டுக்குள் வெள்ளிக்கிழமை சடலங்களாக மீட்கப்பட்டனா்.
சடலம்
நிலக்கோட்டையில் வயதான தம்பதி பூட்டிய வீட்டுக்குள் வெள்ளிக்கிழமை சடலங்களாக மீட்கப்பட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை புதுத் தெருவை சோ்ந்தவா் கோபால் (71). துணி வியாபாரி. இவரது மனைவி விஜயலட்சுமி (65). இந்தத் தம்பதியின் 2 மகன்கள், ஒரு மகள் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில் கோபால், விஜயலட்சுமி தம்பதி மட்டும் புதுத்தெருவில் உள்ள வீட்டில் வசித்து வந்தனா்.
இந்த வீட்டின் கதவு வெள்ளிக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினா்
கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்த போது இருவரும் உயிரிழந்த நிலையில் கிடந்தனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற நிலக்கோட்டை போலீஸாா் இருவரின் உடல்களை மீட்டு, கூறாய்வுக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தம்பதியின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

