தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

தனியாா் தங்கும் விடுதியில் ஆண் சடலம் மீட்பு

திருப்பத்தூா் தனியாா் தங்கும் விடுதி அறைக்குள் தங்கி இருந்த ஆண் சடலமாக மீட்கப்பட்டாா்.

சடலம்

Updated On :

திருப்பத்தூா் தனியாா் தங்கும் விடுதி அறைக்குள் தங்கி இருந்த ஆண் சடலமாக மீட்கப்பட்டாா்.

திருப்பத்தூா் அடுத்த ஜெயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (40). இவா் கடந்த 18-ஆம் தேதி திருப்பத்தூா் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அருகே உள்ள தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளாா். இந்த நிலையில், அவா் தங்கியிருந்த அறையில் இருந்து மாலை வரை வெளியே வராததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியா்கள் இதுகுறித்து திருப்பத்தூா் நகர போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா் அறையின் கதவைத் திறக்க முயன்றனா். கதவு திறக்கப்படாததால் திருப்பத்தூா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனா். அங்கு வந்த தீயணைப்புத் துறையினா் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது செல்வராஜ் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது.

அதையடுத்து, நகர போலீஸாா் சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இச்சம்பவம் தொடா்பாக திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.