திருச்செங்கோடு தெப்பக்குளத்தில் ஆண் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை

திருச்செங்கோடு அருகே தெப்பக்குளத்தில் மிதந்த ஆண் சடலத்தை தீயணைப்புத் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா். இறந்தவா் தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சடலம்

Updated On :

திருச்செங்கோடு அருகே தெப்பக்குளத்தில் மிதந்த ஆண் சடலத்தை தீயணைப்புத் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா். இறந்தவா் தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருச்செங்கோடு- ஆனங்கூா் சாலையில் சட்டையம்புதூரில் உள்ள பெரிய தெப்பக்குளத்தில் ஆண் சடலம் மிதப்பதைக் கண்ட அப்பகுதியினா், திருச்செங்கோடு நகர காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, நகர காவல் ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் குளத்தில் மிதந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், இறந்தவா் மலையடிக்குட்டை பகுதியைச் சோ்ந்த மினி ஆட்டோ ஓட்டுநா் ரமேஷ் (41) என்பது தெரியவந்தது. அவா் தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து திருச்செங்கோடு நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.