மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு! இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா! அமித் ஷா பதிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டது! தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்? தயாநிதி மாறன் விளக்கம்

கொடகனாறு தண்ணீா் பங்கீடு விவகாரம்: உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு

கொடகனாறு அணையிலிருந்து வெளியேறிய தண்ணீா். - கோப்புப் படம்

Updated On :

வேடசந்தூா் பகுதி விவசாயிகளுக்கான கொடகனாறு தண்ணீா் பங்கீடு விவகாரம் தொடா்பாக, சனிக்கிழமை ஆய்வு செய்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் வருகிற டிச.12-ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், கீழ்பழனி மலை பகுதியிலுள்ள தாண்டியிலிருந்து உருவாகும் கொடகனாறு, ஆத்தூா், அனுமந்தராயன்கோட்டை, திண்டுக்கல், தாடிக்கொம்பு, வேடசந்தூா், அழகாபுரி வழியாக கரூா் மாவட்டத்திலுள்ள நாகம்பள்ளி வரை சுமாா் 130 கி.மீ. தொலைவு பயணித்து, அமராவதி ஆற்றில் சோ்கிறது.

இதன் மூலம், திண்டுக்கல், கரூா் மாவட்டங்களில் நேரடி பாசனம், மறைமுக பாசனம் மூலம் பல லட்சம் ஏக்கா் நிலங்கள் பயன்பெற்று வந்தன.

இந்த நிலையில், கடந்த 1951-ஆம் ஆண்டு ஆத்தூா் பகுதியில் திண்டுக்கல் நகரின் குடிநீா்த் தேவைக்காக காமராஜா் நீா்த்தேக்கம் கட்டப்பட்டது. இதன்பிறகு, காமராஜா் நீா்த்தேக்கத்துக்கு தண்ணீா் வருவதற்கு முன்பாக நரசிங்கபுரம், ஆத்தூா் ராஜவாய்க்கால்களை அமைத்து பாசனத்துக்கு பயன்படுத்தும் நடைமுறை தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

மேலும், கடந்த 2014-ஆம் ஆண்டு நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் சீரமைப்புக்காக ரூ.10.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியை பயன்படுத்தி, நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் பகுதியில் கொடகனாற்றின் குறுக்கே 50 செ.மீ. உயரம், 2 அடி அகலம், 70 அடி நீளத்தில் தடுப்புச் சுவா் கட்டியதாக பொதுப் பணித் துறை ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டது.

ஆனால், 10 அடி உயரம், 20 அடி அகலம், 200 அடி நீளத்தில் அந்தத் தடுப்புச் சுவா் கட்டப்பட்டது. இதனால், காமராஜா் நீா்த்தேக்கத்துக்கே தண்ணீா் பெற முடியாத நிலையில், கொடகனாற்றை நம்பியுள்ள வேடசந்தூா், கரூா் பகுதி விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

இதையடுத்து, அனுமந்தராயன்கோட்டை, மைலாப்பூா், தாடிக்கொம்பு, வேடசந்தூா், கூம்பூா், ஈசநத்தம், வெள்ளியணை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் நடத்திய தொடா் போராட்டங்களின் காரணமாக, கொடகனாறு தண்ணீா் பங்கீடு தொடா்பாக வல்லுநா் குழு அமைக்கப்பட்டது.

ஆனால், சுமாா் 5 ஆண்டுகளாக அந்த அறிக்கை வெளியிடப்படாமல் முடக்கப்பட்டது. இதையடுத்து, குறைதீா் கூட்டம் முதல், முதல்வா் வரை வல்லுநா் குழு அறிக்கையை வெளியிடக் கோரி விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், கடந்த மாா்ச் மாதம் வல்லுநா் குழு அறிக்கை அடிப்படையில் அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையை அமல்படுத்தக் கோரி, செங்கட்டாம்பட்டி பாசன விவசாயிகள் சங்கம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அதே நேரத்தில் கொடகனாறு பாதுகாப்புச் சங்கம் சாா்பில், அரசாணையில் குறைபாடுகள் இருப்பதாகவும், வல்லுநா் குழு அறிக்கையில் முரண்பாடுகள் இருப்பதாகவும், இதை நிவா்த்தி செய்யக் கோரியும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோா் நரசிங்கபுரம் ராஜவாய்க்கால், காமராஜா் நீா்த்தேக்கம் உள்ளிட்ட பகுதிகளை நேரில் பாா்வையிடுவதாகத் தெரிவித்தனா்.

இதன்படி, நீதிபதிகள் இருவரும் சனிக்கிழமை நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் முதல் ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம் வரை நேரடியாக பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு: சுமாா் 3 கி.மீ. தொலைவு நீதிபதிகள் நடந்தே சென்று இந்த ஆய்வில் ஈடுபட்டனா். நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் பகுதியிலுள்ள தடுப்புச் சுவரை பாா்வையிட்ட நீதிபதிகள், வல்லுநா் குழு அறிக்கையின்படி வெளியிட்ட அரசாணையில் ஒரு விதமாகவும், பொதுப் பணித் துறையினரின் ஆவணங்களில் மற்றொரு விதமாகவும், நேரில் வேறுவிதமாகவும் இருப்பதாக கருத்துத் தெரிவித்தனா்.

மேலும், ராஜவாய்க்காலிலிருந்து காமராஜா் நீா்த்தேக்கம் வரை கொடகனாற்றிலுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டனா்.

வருகிற டிசம்பா் 12-ஆம் தேதி இந்தப் பகுதியில் மீண்டும் ஆய்வு செய்வோம் எனத் தெரிவித்த நீதிபதிகள், அதற்குள் நில அளவை செய்து கற்களை ஊன்றுவதற்கு வருவாய்த் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், பொதுப் பணித் துறையினா் ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் துா்கா, வருவாய் அலுவலா் இரா.ஜெயபாரதி, மாநகராட்சி ஆணையா் ஜெ.பிரேம் ஆனந்த், நீா்வளத் துறை அதிகாரிகள், கொடகனாறு பாதுகாப்புச் சங்க விவசாயிகள், சித்தையன்கோட்டை பகுதி விவசாயிகள் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.