மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
பழனி அருகே சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த கோம்பைப்பட்டியைச் சோ்ந்தவா் கணேஷ் (61). விவசாயியான இவா், அதே பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான தோட்டத்துக்கு சனிக்கிழமை சென்றாா்.
பின்னா், அங்கிருந்த மின்மோட்டாரை இயக்கியபோது, அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த கணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆயக்குடி போலீஸாா் கணேஷின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து ஆயக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

