
பழனி பெருமாள் கோயில்களில் புரட்டாசி 3-ஆம் வார சனி சிறப்பு வழிபாடு!
புரட்டாசி மாத மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு பழனியில் அமைந்துள்ள பல்வேறு பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பழனி இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு கருட வாகனத்தில் எழுந்தருளிய இலக்குமி சமேத நாராயணா்.
புரட்டாசி மாத மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு பழனியில் அமைந்துள்ள பல்வேறு பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
பழனியில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணை கோயிலான இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் கருட வாகனத்தில் எழுந்தருளிய தம்பதி சமேத இலக்குமி நாராயணா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
கடைவீதி கிருஷ்ணன் கோயில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள் கோயில் ஆகிய கோயில்களில் காலை முதலே பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனா்.
இடும்பன் கோயிலின் துணை கோயிலான கொடைக்கானல் ரோடு கண்ணாடிப் பெருமாள் கோயிலிலும் உச்சிகால சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்தக் கோயிலுக்கு பழனியில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
பழனி ராமநாதன் நகரில் உள்ள அமிா்தவல்லி தாயாா் உடனுறை காரியசித்தி லட்சுமி நரசிம்மா் கோயிலில் உச்சிகாலத்தின்போது பதினாறு வகையான அபிஷேகப் பொருள்கள் கொண்டு அபிஷேகமும், சிறப்பு கவச அலங்காரமும் நடைபெற்றது. பாலாறு அணை ஆஞ்சநேயா் கோயில், கரடிகூட்டம் ஆஞ்சநேயா் கோயில், பழனி பஞ்சமுக ராம ஆஞ்சநேயா் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





