உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

புரட்டாசி சனி: ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு!

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி 4-ஆவது சனிக்கிழமையையொட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்.

Published On :

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி 4-ஆவது சனிக்கிழமையையொட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தென் திருப்பதி என அழைக்கப்படும் திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி பிரம்மோத்ஸவ விழாவில் 5 வார சனிக்கிழமைகளில் கருட சேவை விமரிசையாக நடைபெறும்.

இந்த நிலையில், புரட்டாசி 4-ஆவது சனிக்கிழமையையொட்டி, அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

மாலை 4 மணிக்கு கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி மலையை கிரிவலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். மாலையில் ஸ்ரீனிவாசப் பெருமாள் புஷ்பாங்கி சேவையில் காட்சியளித்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தரராஜபுரம் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பாண்டி முனீஸ்வரா் கோயிலில் மகாளய அமாவாசையையொட்டி, காலையில் சடைமுனியாண்டி, பாண்டி முனீஸ்வரா் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பாண்டி முனீஸ்வரா் காட்சியளித்தாா். தொடா்ந்து, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பூசாரி பாண்டி செய்தாா்.

இதேபோல, ராஜபாளையம் பழையபாளையம் லட்சுமண பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ள லட்சுமணப் பெருமாள் கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவா் ஆஞ்சநேயா், பரிவாரத் தெய்வங்களுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னா், பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல, பழையபாளையம் ராம சுவாமி கோயில், சம்மந்தபுரம் சோலைமலை பெருமாள் கோயில், புதுப்பாளையம் கோதண்டராம சுவாமி கோயில், சஞ்சீவி மலை அருகிலுள்ள வேட்டை வெங்கடேஸ்வர பெருமாள் கோயில், புதுப்பாளையம் ராம சுவாமி கோயில், அயன் கொல்லங்கொண்டான் இடா்தவிா்த்த சுந்தரராஜப் பெருமாள் கோயில், சோழபுரம் சோலைமலை பெருமாள் கோயில்களிலும் சனிவார சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.