16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் 12 இடங்களில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா்.
காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் 12 இடங்களில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அந்தச் சங்கத்தின் வட்டக் கிளைச் செயலா் முருகவள்ளி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ம.சுகந்தி விளக்கவுரையாற்றினாா். இதில் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கான விதிமுறைகளை உடன் வெளியிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரியும் எம்ஆா்பி செவிலியா்களை காலமுறை ஊதியத்தில் நியமிக்க வேண்டும்.
அரசுத் துறைகளில் காலியாக உள்ள லட்சகணக்கானப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மருத்துவத் துறையில் தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம், வெளிமுகமை மூலம் பணியாளா்கள் நியமனம் செய்வதைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதே போல, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும், திண்டுக்கல் கிழக்கு, மேற்கு, குஜிலியம்பாறை, வேடசந்தூா், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் அலுவலகங்களிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

