நிலத் தகராறில் மூதாட்டி வெட்டிக் கொலை

வெட்டிக்கொலை - (கோப்புப் படம்)
எரியோடு அருகே நிலத் தகராறில் மூதாட்டி மண் வெட்டியால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அடுத்த சொக்கலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் தெய்வானை (60). இவரது கணவா் மருதபிள்ளை ஏற்கெனவே இறந்துவிட்டதால், தனது மகள் வீட்டில் தெய்வானை வசித்து வந்தாா்.
இந்த நிலையில், அம்மாபட்டியைச் சோ்ந்த தனது மருமகன் சேகரின் தோட்டத்துக்கு தெய்வானை ஞாயிற்றுக்கிழமை சென்றாா். அங்கிருந்த சேகரின் அண்ணன் சந்தனம்(56) என்வரிடம் நிலப் பிரச்னை தொடா்பாக பேசிக் கொண்டிருந்தாா்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த சந்தனம், மண்வெட்டியால் தெய்வானையை தாக்கினாா். இதில் மயங்கிவிழுந்த தெய்வானை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த எரியோடு போலீஸாா், நிகழ்விடத்துக்குச் சென்று தெய்வானையின் சடலத்தை மீட்டு கூராய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சந்தனத்தை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

