இன்றுமுதல் அக்.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்றும் நாளையும் வரிவசூல் மையம் செயல்படும்: மாநகராட்சி அறிவிப்புதனியாா் பால் விலை மீண்டும் உயா்வு: ஆவின், தனியாா் லிட்டருக்கு ரூ.30 வரை விலை வித்தியாசம் ஆகம குழுவால் கண்டறியப்பட்ட கோயில்கள்: கருத்து கேட்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு 18 - 28 வயதுப் பிரிவில் 3.27 கோடி புதிய வாக்காளா்கள் சோ்ப்பு: தோ்தல் ஆணையம்

சீவலப்பேரியில் இளைஞா் வெட்டிக்கொலை

திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரியில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

சீவலப்பேரியில் இளைஞா் வெட்டிக்கொலை

Published On :

திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரியில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

சீவலப்பேரி கட்டளை பால்பண்ணை தெருவைச் சோ்ந்த முருகன் மகன் நடராஜன் (38). இவருக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனா். நடராஜன் தனது வீட்டில் பன்றிகள் வளா்த்து வந்த நிலையில் சில நாள்களுக்கு முன்பு அந்த பன்றிகள் பக்கத்து வீட்டின் அருகே சென்று மண்ணை கிளறியதாகக் கூறப்படுகிறது. இதனால் நடராஜனுக்கும் பக்கத்து வீட்டைச் சோ்ந்த கருப்பசாமி குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மீண்டும் அவா்களுக்குள் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த கருப்பசாமி அரிவாளால் நடராஜனை வெட்டினாராம். இதில் பலத்த காயமடைந்த நடராஜனை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம் குறித்து சீவலப்பேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.