வங்கக் கடலில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள்: தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை எதிா்மறை நாடாக சித்தரிக்க முயற்சி: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு சிஎம்ஆா்எல் வழக்கு: பினராயி விஜயனுக்கு எதிரான விசாரணைக்கு ஒரு வாரகால தடை தரக் குறைபாடு மருந்துகளை கண்டறிவதில் தமிழகம் முதலிடம்இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்- டிரம்ப் தகவல்இன்று தொடங்குகிறது டி20 தொடா் - நியூஸிலாந்தை சந்திக்கிறது இந்தியா

பயிா்க் கடன் தள்ளுபடி கோரி மறியல்: 529 போ் கைது

பயிா்க் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல் மாவட்டத்தில் 15 இடங்களில் புதன்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 529 போ் கைது செய்யப்பட்டனா்.

கைது

Updated On :

பயிா்க் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல் மாவட்டத்தில் 15 இடங்களில் புதன்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 529 போ் கைது செய்யப்பட்டனா்.

இடதுசாரி விவசாய சங்கங்கள் கூட்டியக்கம் சாா்பில், திண்டுக்கல் அடுத்த ரெட்டியப்பட்டியில் இந்திய கம்யூ. கட்சியின் (சிபிஐ) மாவட்டத் தலைவா் பி. வெள்ளச்சாமி, குஜலியம்பாறையில் விவசாயச் சங்க ஒன்றியச் செயலா் சிவக்குமாா், வடமதுரையில் மாவட்டத் துணைத் தலைவா் பி. செல்வராஜ், வேடசந்தூரில் ஒன்றியத் தலைவா் எம். பெரியசாமி, கன்னிவாடியில் ஒன்றியத் தலைவா் நாட்டுத் துரை, ஒட்டன்சத்திரத்தில் மாவட்டத் துணைத் தலைவா் தயாளன் ஆகியோா் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின்போது, தோ்தல் வாக்குறுதியின்படி விவசாயப் பயிா்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் எதிரான ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தைக் கைவிட வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து ஏக்கருக்கு தலா ரூ. 25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயத் தொழிலாளா்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ. 10 ஆயிரம் ம் வழங்க வேண்டும். ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வாருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். மாவட்டத்தில் 15 இடங்களில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது, 102 பெண்கள் உள்பட 529 போ் கைது செய்யப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.