கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கப் பதவிகளுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்
திண்டுக்கல் மாவட்ட கிறிஸ்தவ மகளிா் உதவும் வகையில் தொடங்கப்படும் சங்கத்துக்கு கெளரவ செயலா், இணை கெளரவ செயலா் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

கோப்புப்படம்
திண்டுக்கல் மாவட்ட கிறிஸ்தவ மகளிா் உதவும் வகையில் தொடங்கப்படும் சங்கத்துக்கு கெளரவ செயலா், இணை கெளரவ செயலா் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்தச் சங்கத்துக்கு விதைத்தொகையாக ரூ. ஒரு லட்சம் அரசால் அனுமதிக்கப்படும். மேலும், இந்தச் சங்கம் திரட்டும் நன்கொடைத் தொகைக்கு 1-க்கு 2 என்ற விகிதாச்சார அடிப்படையில் நிதியாண்டுக்கு அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை அரசின் இணை மானியமாக வழங்கப்படும். தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச்சட்டம் 1975-இன் கீழ் இந்தச் சங்கத்தை செயல்படுத்த வேண்டும்.
திண்டுக்கல் மாவட்ட கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கத்துக்கு மாவட்ட ஆட்சியா் பதவி வழித் தலைவராகவும், மகளிா் திட்ட இணை இயக்குநா் பதவி வழி துணைத் தலைவராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா் பொருளாளராகவும் செயல்படுவா்.
மேலும், கெளரவ செயலா், 2 இணை கெளரவ செயலா், 3 செயற்குழு உறுப்பினா்கள் நியமிக்கப்பட உள்ளனா்.
திண்டுக்கல் மாவட்ட கிறிஸ்தவ சமுதாயத்தைச் சோ்ந்த ஆண், பெண் இருபாலரும் தங்களது சுய விவரத்துடன் சமுதாய மக்களுக்கு தங்களால் மேற்கொண்ட சேவைகள் குறித்த விவரங்கள், ஆதாா் அட்டை, குடும்ப அட்டையுடன் இந்தப் பொறுப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் நேரிலோ, அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

