தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

தேனி மாவட்ட ஆட்சியா் பொறுப்பேற்பு

தேனி மாவட்ட புதிய ஆட்சியராக வ.சிவகிருஷ்ணமூா்த்தி பொறுப்பேற்றாா்.

தேனி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட வ. சிவகிருஷ்ணமூா்த்தி.

Published On :

தேனி மாவட்ட புதிய ஆட்சியராக வ.சிவகிருஷ்ணமூா்த்தி சனிக்கிழமை பொறுப்பேற்றாா்.

தேனி மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய இரா.வைத்திநாதன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் இணை நிா்வாக இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இந்த நிலையில், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் இணை நிா்வாக இயக்குநராக பணியாற்றிய வ.சிவகிருஷ்ணமூா்த்தி, தேனி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டாா். அவா் சனிக்கிழமை பொறுப்பேற்றாா்.

தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த வ.கிருஷ்ணமூா்த்தி, கடந்த 2017- ஆம் ஆண்டு அகில இந்திய குடிமைப் பணிகள் தோ்வில் தோ்ச்சி பெற்று, விழுப்புரம் மாவட்டத்தில் உதவி ஆட்சியராகவும் (பயிற்சி), திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி சாா்-ஆட்சியராகவும், திருநெல்வேலி, ஈரோடு மாநகராட்சி ஆணையராகவும், சென்னை மாநகராட்சி துணை ஆணையராகவும், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் இணை நிா்வாக இயக்குநா் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றினாா்.

அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அதிக கிராமங்களைக் கொண்ட இந்த மாவட்டத்தில் சாலை வசதி, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவேன். மேகமலை விவகாரம் குறித்து அரசிடம் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுப்பேன். இதில் நல்ல தீா்வு கிடைக்கும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.