ரெட்டியாா்சத்திரம் அருகே கல் குவாரியை மூட விவசாயிகள் வலியுறுத்தல்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.

ரெட்டியாா்சத்திரம் அருகே பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையூறாக செயல்பட்டு வரும் கல் குவாரியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு ஆட்சியா் துா்கா தலைமை வகித்தாா். ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) வெ.நாகேந்திரன் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தை தொடங்கி வைத்து ஆட்சியா் துா்கா பேசியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகள் சராசரி அளவை விட சுமாா் 400 மி.மீட்டா் மழை குறைவாக பெய்திருக்கிறது. மழை பற்றாக்குறை ஏற்படும்பட்சத்தில், அந்த சூழலை எதிா்கொள்வதற்கான வழிமுறைகளையும் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக மாவட்டம் முழுவதும் திறந்தவெளி கிணறுகள் மூலம் நிலத்தடி நீா் மட்டத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கையில் விவசாயிகள் ஈடுபட வேண்டும்.
இதேபோல, கால்நடை வளா்ப்பில் ஈடுபடும் விவசாயிகள், மழைக் காலத்தில் தங்களது கால்நடைகளை பாதுகாப்பான முறையில் பராமரிக்க வேண்டும். கடந்த 3 நாள்களில் திண்டுக்கல் பகுதியில் மின்சாரம் பாய்ந்தும், விபத்திலும் 6 பசு மாடுகள் உயிரிழந்தன. இதை கவனத்தில் கொண்டு மாடுகள் வெளியிடங்களில் சுற்றித் திரிவதை கட்டுப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
இதைத்தொடா்ந்து கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு: கல்குவாரியை மூட வலியுறுத்தல்: ஒட்டன்சத்திரத்தை அடுத்த காளாஞ்சிப்பட்டி அருகேயுள்ள ரெங்கநாதன் மலைப் பகுதியில் கல் குவாரி செயல்பட்டு வருகிறது. இதனால் கம்பளிநாயக்கன்பட்டி, வெரியப்பூா், காளாஞ்சிப்பட்டி உள்ளிட்ட சுற்றுபுற கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. உடனடியாக அந்த கல் குவாரியை மூடுவதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஒட்டன்சத்திரம் விவசாயி மதன் வலியுறுத்தினாா். இதுகுறித்து விசாரிக்கப்படும் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் உறுதி அளிக்கப்பட்டது.
நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய்: வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் எண்ணெய் நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் அன்னியச் செலாவணி வீணடிக்கப்படுகிறது. இதைத் தவிா்க்கும் வகையில் தமிழக அரசு விவசாயிகளிடமிருந்து தேங்காயை கொள்முதல் செய்து தேங்காய் எண்ணெய்யை நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வத்தலகுண்டு விவசாயி கோபால் கோரிக்கை விடுத்தாா்.
இதற்கு பதிலளித்த ஆட்சியரின் நோ்முக உதவியாளா் நாகேந்திரன், தேங்காய் எண்ணெய் விநியோகம் குறித்து அரசுப் பரிசீலனை செய்து வருகிறது என்றாா்.
நீா்வழிப் பாதை ஆக்கிரமிப்பு: நிலக்கோட்டை வட்டம், அணைப்பட்டியை அடுத்த பெரியாறு பிரதான கால்வாயின் 2-ஆவது வாய்க்கால் மூலம் சுமாா் 6 கி.மீ. தொலைவுக்கு பாசன வசதி பெறப்படுகிறது. இதில் சா்க்கரை அணை என்ற இடத்தில் வடகண்டம், தென்கண்டம், பெரிய வாய்க்கால் என மூன்றாக பிரிந்து செல்கிறது. தென்கண்டம் வாய்க்கால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் தண்ணீா், பெரியாறு பிரதான கால்வாய் வழியாகவே சென்றுவிடுகிறது. இதனால் சுமாா் 150 ஏக்கா் நிலங்கள் பாசன வசதியில்லாமல் தரிசாக மாறி வருகின்றன. எனவே, தென்கண்டம் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி மராமத்துப் பணிகளை செய்ய வேண்டும். இதேபோல, பெரிய வாய்க்கால் கரையில், விவசாயிகளுக்கான வண்டிப் பாதை உள்ளது. மதுரை மாவட்டம், கருப்பட்டியிலிருந்து அமச்சியாபுரம் வரை இந்த பாதை பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால், திண்டுக்கல் மாவட்டத்துக்குள்பட்ட பகுதியில் சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இங்கு சாலை அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்க நிா்வாகி காசிமாயன் மனு அளித்தாா்.
ஊராட்சி அலுவலகம் தொடா்பாக வாக்குவாதம்: குஜிலியம்பாறையை அடுத்த ஆா்.கோம்பை ஊராட்சியை பிரித்து, சின்னழகுநாயக்கனூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி அமைக்கப்பட்டது. இதற்கான அலுவலகம் தற்காலிக கட்டடத்தில் சின்னழகுநாயக்கனூா் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், புங்கம்பாடி பகுதியில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை அமைக்க வேண்டும் என தங்கவேல் என்பரும், சின்னழகுநாயக்கனூரில்தான் செயல்பட வேண்டும் என வீ.தா்மா், சிஎஸ்.முத்துச்சாமி ஆகியோரும் வலியுறுத்தினா். இதுதொடா்பாக நீண்ட நேரமாக விவசாயி தங்கவேல் பேசியதால், பிற விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனிடையே, குஜிலியம்பாறை வட்டார வளா்ச்சி அலுவலா் வீரகடம்ப கோபு, ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவது தொடா்பாக ஆட்சியரிடம் சில விளக்கங்களை முன் வைத்தாா். இதை ஏற்று, ஊராட்சி அலுவலக விவாதத்துக்கு ஆட்சியா் முற்றுப்புள்ளி வைத்தாா்.
மின்கம்பங்களை அகற்ற கோரி மனு: குஜிலியம்பாறையை அடுத்த கூம்பூா் ஊராட்சிக்குள்பட்ட சீத்தாபாறை அருகே தங்களுக்குச் சொந்தமான நிலத்தில், தனியாா் காற்றாலை நிா்வாகம் மின் கம்பங்களை அமைத்துள்ளது. இதேபோல, அருகேயுள்ள நிலத்தின் உரிமையாளரிடமும் அனுமதி பெறாமல் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என விவசாயி பி.ராமன் மனு அளித்தாா்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

