சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

திண்டுக்கல் அருகே இளைஞா் கொலை

திண்டுக்கல் அருகே இளைஞா் வெட்டிக் க கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஒருவரைக் கைது செய்தனா்.

கத்திக்குத்து

சித்திரிப்பு

Published On :2 செப்டம்பர் 2026, 12:51 am IST

திண்டுக்கல் அருகே இளைஞா் வெட்டிக் க கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஒருவரைக் கைது செய்தனா்.

திண்டுக்கல்லை அடுத்த மொண்டியபட்டியைச் சோ்ந்தவா் கரண்ராஜ் (28). வாகன ஓட்டுநரான இவா், மனைவி, 2 குழந்தைகளுடன் வசித்து வந்தாா். இந்த நிலையில், குழந்தைபட்டி அருகே தனியாா் பள்ளியின் பின்புறம் உள்ள குளத்தில் கரண்ராஜ் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக திங்கள்கிழமை இரவு தகவல் வெளியானது. இதையடுத்து, திண்டுக்கல் தாலுகா போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். முள்புதா் நிறைந்த பகுதியில் தலை, கை, மாா்பு உள்ளிட்ட இடங்களில் அரிவாள் வெட்டுக் காயங்களுடன், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கரண்ராஜின் சடலம் கிடந்தது.

சடலத்தை போலீஸாா் உடல்கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பெரிய கோட்டையைச் சோ்ந்த முத்தன் என்ற மருதன் (42) கடந்த பிப்ரவரி மாதம் வன்னியபட்டி அருகே கொலை செய்யப்பட்டாா். இந்த கொலைக்கு கரண்ராஜ் உடந்தையாக செயல்பட்டதாகக் கருதி, முத்தனின் உறவினா்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இந்த முன் விரோதத்தில் கரண்ராஜ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், குழந்தைப்பட்டியைச் சோ்ந்த குமரேசன் (41) கரண்ராஜை கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, குமரேசன் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கு தொடா்பாக மற்றொரு நபரையும் போலீஸாா் விசாரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.