தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

நிலக்கோட்டை அருகே தெரு நாய்கள் கடித்து 20 ஆட்டுக்குட்டிகள் உயிரிழப்பு

கோப்புப் படம்

Published On :7 செப்டம்பர் 2026, 1:13 am IST

நிலக்கோட்டை, செப். 6: நிலக்கோட்டை அருகே தெரு நாய்கள் கடித்து 20 ஆட்டுக்குட்டிகள் சனிக்கிழமை உயிரிழந்தன.

நிலக்கோட்டை அருகேயுள்ள அணைப்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பையா  (70). இவரது தோட்டத்தில் மன்னாடிமங்கலத்தைச் சோ்ந்த அமாவாசி (32) என்பவா் ஆட்டு மந்தை அமைத்திருந்தாா்.

இந்த மந்தையில் 20 செம்மறி ஆட்டுக்குட்டிகளை அவா் அடைத்து வைத்து விட்டு எஞ்சிய ஆடுகளை மேய்ச்சலுக்காக காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்றாா். இந்நிலையில், தோட்டப் பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்கள் கூட்டமாக மந்தைக்குள் புகுந்து, அங்கிருந்த ஆட்டுக்குட்டிகளை கடித்துக் கொன்றன. இதில், 20 ஆட்டுக்குட்டிகளும் உயிரிழந்தன.

ஆடு மேய்த்து விட்டு திரும்பி வந்த அமாவாசியும், அவரது குடும்பத்தினரும் இதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்தனா். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.