
பழனியில் 3 பேருந்துகள் ஜப்தி
பழனியில் விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் 3 அரசுப் பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டன.

ஜப்தி செய்யப்பட்டு நீதிமன்ற வளாகம் முன் நிறுத்தப்பட்ட பேருந்துகள்.
பழனியில் விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் 3 அரசுப் பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டன.
மதுரை மாவட்டம், பேரையூா் அருகேயுள்ள சந்தையூரைச் சோ்ந்த தங்கசாமி மகன் கவிநேசன் (22). இவா் கடந்த 2023-ஆம் ஆண்டு பழனிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, ஆயக்குடி பகுதியில் அரசுப் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா். இதுகுறித்து ஆயக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
இந்த வழக்கில் விபத்து இழப்பீடு வழங்கக் கோரி கவிநேசன் குடும்பத்தினா் பழனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கில் இழப்பீடாக ரூ.28 லட்சம் வழங்க போக்குவரத்துக்கழகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இழப்பீடு வழங்காமல் காலதாமதம் செய்ததால் பழனி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தனா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மலா்விழி, இழப்பீட்டுத் தொகை ரூ.28 லட்சத்துடன் வட்டி சோ்த்து மொத்தம் ரூ.34 லட்சம் வழங்கவும், தவறினால் 3 அரசுப் பேருந்துகளை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டாா். இதன் பிறகும் பணம் வழங்காததால் வியாழக்கிழமை பழனி பேருந்து நிலையத்தில் கரூா், திருச்சிக்கு புறப்படுவதற்கு நின்றிருந்த 3 அரசுப் பேருந்துகளை நீதிமன்றப் பணியாளா்கள் ஜப்தி செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





