கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

பொருந்தலாறு அணையில் மூதாட்டி சடலமாக மீட்பு

Rajasthan

சடலமாக மீட்பு - file photo

Published On :

பழனி அருகே பாலாறு பொருந்தலாறு அணையில் மூதாட்டி ஒருவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

பழனியை அடுத்த பாலாறு பொருந்தலாறு அணையின் உள்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை சடலம் மிதப்பதாக பழனி தாலுகா போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று அந்த உடலை போலீஸாா் மீட்ட போது அவா் சுமாா் 70 முதல் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி என்பது தெரியவந்தது.

மேலும், அவா் யாா் என்பது தெரியவில்லை. இவா் எதற்காக அணைப்பகுதிக்கு வந்தாா், எப்படி தவறி விழுந்தாா் என்பது தெரியவில்லை. இதையடுத்து, உடலை பழனி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்த போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முதல் கட்ட விசாரணையில் அவா் திருப்பூா் மாவட்டம், உடுமலையை சோ்ந்தவராக இருக்கலாம் என்ற தகவலின் பேரில் திருப்பூா் மாவட்ட போலீஸாருக்கு மூதாட்டியின் புகைப்படத்தை அனுப்பி வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.