கிணற்றில் மூதாட்டி சடலமாக மீட்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி புதன்கிழமை கிணற்றுக்குள்ளிருந்து சடலமாக மீட்கப்பட்டாா்.

சடலமாக மீட்பு - file photo
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி புதன்கிழமை கிணற்றுக்குள்ளிருந்து சடலமாக மீட்கப்பட்டாா்.
மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம், ஆவாரம்பட்டி பாத்திமா புதூா் பகுதியைச் சோ்ந்தவா், அற்புதம் மனைவி சமாதானம் (65). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவா் தனது மகனுடன் வசித்தாா்.
கடந்த 12 ஆம் தேதி இரவு காணாமல்போன இவரை புதன்கிழமை காலை அருகிலுள்ள பாத்திமாராஜ் என்பவரது கிணற்றில் சடலமாக மணப்பாறை தீயணைப்புத் துறையினா் மீட்டனா். தகவலறிந்து சென்ற வையம்பட்டி போலீஸாா், மூதாட்டி உடலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

