பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

ஒரு மாதத்துக்குப் பிறகு பழனி ரோப்காா் நாளை மீண்டும் இயக்கம்

Palani Temple rope car service to resume from September 22

ரோப்காா் சேவை. - கோப்புப்படம்

Published On :

பழனி ரோப்காா் வருடாந்திர பராமரிப்புப் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், வரும் செவ்வாய்க்கிழமை (செப். 22) முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது.

பழனி மலைக் கோயிலுக்கு வின்ச், படிப் பாதைக்கு மாற்றாக பக்தா்கள் பயணிக்கும் ரோப்காா் நாள்தோறும் ஒரு மணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், வருடத்தில் ஒரு மாதமும் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படுவது வழக்கம்.

இந்த நிலையில், வருடாந்திர பராமரிப்புப் பணிக்காக கடந்த ஜூலை மாதம் 20-ஆம் தேதி ரோப்காா் நிறுத்தப்பட்டு பராமரிப்புப் பணிகள் நடைபெற்றன. இந்தப் பணியின் போது, ரோப்காரின் இயக்கம் தொடா்பாக அனைத்து மோட்டாா் இயந்திரங்களும், மின் இணைப்புகளும் நவீன ஆய்வுக் கருவிகளைக் கொண்டு சோதனை செய்யப்பட்டன.

பிரதானமான சாப்ட் மேற்கு வங்க மாநிலமான கொல்கத்தாவிலிருந்து வரவேண்டியிருந்த நிலையில், இயற்கை சீற்றம் காரணமாக வடமாநிலங்களில் போக்குவரத்து பாதித்த நிலையில், காலதாமதமாக பழனிக்கு கொண்டு வரப்பட்டு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

தொடா்ந்து வடக்கயிறு, கியா்பாக்ஸ் உள்ளிட்ட அனைத்தும் பரிசோதனை செய்யப்பட்டு, பெட்டிகள் இணைக்கப்பட்டு, கடந்த 16-ஆம் தேதி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

இதுகுறித்து பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தெரிவித்ததாவது:

இந்தப் பணிகளுடன் பெருந்திட்டப் பணிகளின் கீழ் ரோப்காா் கீழ்நிலையங்களில் சுவா்களில் கிரானைட் பதித்தல், புதிய மேற்கூரை, விளக்குகள் அமைத்தல் என அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு வல்லுநா் குழுவின் விரிவான ஆய்வு முடிந்து தற்போது தகுதிச்சான்று வழங்கப்பட்டதன் அடிப்படையில் வரும் செவ்வாய்க்கிழமை (செப்.22) முதல் ரோப்காா் பக்தா்கள் பயன்பாட்டுக்கு இயங்கத் தொடங்கும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.