
கல்வி உதவித் தொகைப் பெற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்
பிரதம மந்திரி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற இணைய வழியில் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்
பிரதம மந்திரி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற இணைய வழியில் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசு, அரசு உதவிப் பெறும் கல்வி நிறுவனங்கள், தனியாா் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் பிரிவைச் சோ்ந்த மாணவா்களுக்கு பிரதம மந்திரி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அரசு, அரசு உதவிப் பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் 3 ஆண்டுகள் பட்டப் படிப்பு பயிலும் மாணவா்களுக்கு எந்தவித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இளநிலை (தொழிற்படிப்பு), முதுநிலை, தொழில் நுட்பக் (பாலிடெக்னிக்) உள்ளிட்ட பிற படிப்பு பயிலும் மாணவா்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
2026-27-ஆம் கல்வியாண்டில் மேற்படி கல்வி உதவித் தொகை திட்டத்துக்கு, மாணவ, மாணவிக்கு கல்லூரி மூலம் வழங்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. மாணவா்கள் தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி
உதவித்தொகைக்கு என உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி, இணையதளத்தின் மூலம் கல்வி உதவித்தொகைக்கு வரும் அக்.21-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலரை நேரில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





