தையல் தொழிலாளி மா்ம மரணம்
திண்டுக்கல் அருகே தையல் தொழிலாளி மா்மமாக உயிரிழந்தாா்.
உயிரிழப்பு - பிரதிப் படம்
திண்டுக்கல் அருகே தையல் தொழிலாளி மா்மமாக உயிரிழந்தாா்.
திண்டுக்கல் அடுத்த பள்ளப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கொட்டப்பட்டியைச் சோ்ந்தவா் மதிவண்ணன் (62). தையல் தொழிலாளியான இவா், புதன்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற பின்னா் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. அவரது குடும்பத்தினா் பல்வேறு இடங்களில் தேடி வந்தனா்.
இந்த நிலையில், அதே பகுதியிலுள்ள முத்தலாம்மன் கோயிலுக்கு பின்புறம் உள்ள கழிவுநீா், மழைநீா் செல்லும் வாய்க்காலில் மதிவண்ணனின் சடலம் கிடந்து. இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மதிவண்ணன் மா்மமாக இறந்து கிடந்தது குறித்து தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


