தமிழக அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தால் நடத்தப்படும் தொழில் திறன் இலவசப் பயிற்சி வகுப்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி:
மதுரையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜூன் 13 ஆம் தேதி சிறப்பு தொழில் திறன் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதில், விருந்தோம்பல், அழகுக் கலை, கால்நடைத் துறை, சில்லரை வணிகம், கணினி பயிற்சி, கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி, இருசக்கர வாகனம் பழுது பார்த்தல், மருத்துவ பணியாளர் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படும். திறன் பயிற்சி பெறுபவர்களுக்கு நாளொன்றுக்கு போக்குவரத்துச் செலவுக்காக ரூ.100 மற்றும் பயிற்சிக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கப்படும்.
பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படுவதுடன் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகைத் திட்ட பயனாளிகள் மற்றும் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யாதவர்கள் பங்கேற்கலாம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.