வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

விபத்தில் சிறுவன் இறப்பு: அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு ஓராண்டு சிறை

உசிலம்பட்டி அருகே அரசுப் பேருந்து மோதி சிறுவன் உயிரிழந்த வழக்கில் பேருந்து ஓட்டுநருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து புதன்கிழமை தீப்பளிக்கப்பட்டது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 1:59 am

DIN

உசிலம்பட்டி அருகே அரசுப் பேருந்து மோதி சிறுவன் உயிரிழந்த வழக்கில் பேருந்து ஓட்டுநருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து புதன்கிழமை தீப்பளிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டியைச் சேர்ந்த துரைப்பாண்டி என்பவர் தனது பேரன் கார்த்திக் உடன் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி குப்பணம்பட்டியில் மதுரை பிரதான சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது தேனியில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து கார்த்திக் மீது மோதி அவர் உயிரிழந்தார். இது குறித்து உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையப் போலீஸார், ஓட்டுநர் ராஜேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் உசிலம்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்த இந்த வழக்கில்,  பேருந்து ஓட்டுநர் ராஜேந்திரனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ. 3,000 அபராதமும் விதித்து நீதிபதி விவேகானத்தன் தீர்ப்பளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.