உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய துப்பரவு பணியாளர்கள் 41 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1984 ஆம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய வருங்கால வைப்பு நிதிக்கு வட்டி வழங்க வேண்டும். மாதந்தோறும் சோப்பு மற்றும் தளவாட சாமான்கள் வழங்கவேண்டும். காலணி மற்றும் கையுறைகள் வழங்க வேண்டும். தேசிய அளவிலான பண்டிகைக்கு முழு நேர விடுப்பு வழங்க வேண்டும் ஆகியன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உசிலம்பட்டியில் நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் புதன்கிழமை துப்புரவு பணியாளர்கள் காலை முதலே பணிகள் எதுவும் செய்யாமல் அலுவலகம் முன்பாக அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மதியம் 12 மணிக்கு மேல் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில துணைச் செயலர் தென்னரசு, நகரச் செயலர் விடுதலை மாரி, நகர துணைச் செயலர் சின்னசாமி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து முற்றுகை செய்தவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 41 பேரை போலீசார் கைது செய்து தனியார் அரங்கில் அடைத்து வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









