நீட்' தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி மனு: விசாரணை ஒத்திவைப்பு
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி, திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.


நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி, திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தாக்கல் செய்த மனு:
2018 - 19 ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மாதம் 6 ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வுக்கு தமிழகத்தில் 1,07,288 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில் 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தமிழ் வழியில் தேர்வு எழுதினர். இத்தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடப்பிரிவுகளில் இருந்து 180 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்த வினாத்தாளில் இயற்பியல் பாடப்பிரிவில் 10 வினாக்களும், வேதியியல் பாடத்தில் 6 வினாக்களும், உயிரியலில் 33 வினாக்களும் என 49 வினாக்கள் தவறாகக் கேட்கப்பட்டிருந்தன. எனவே, தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தவறாகக் கேட்கப்பட்டிருந்த 49 வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும். அதுவரை தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு அனுமதியளித்த நீதிபதிகள், இந்த மனு பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு ஏற்கப்படும் என்றனர்.
பின்னர், மனு விசாரணைக்கு வந்தபோது, நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், தேர்வு முடிவுகள் வெளியானதால் இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டிய தேவையில்லை எனக்கூறி வழக்கமான விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...