மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக கட்டணம் வசூலித்த கழிப்பறையின் உரிமத்தை ரத்து செய்யுமாறு மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) பகுதிகளில் கீழமாசி வீதி, தெற்கு மாசி வீதி, தெற்கு வெளிவீதி மற்றும் பெரியார் பேருந்து நிலையப் பகுதிகளில் நடைபெற்றுவரும் சாலை மேம்பாட்டுப் பணிகளை ஆணையர் அனீஷ் சேகர் ஆய்வு செய்தார்.
பெரியார் பேருந்து நிலையத்துக்குள் கடைகளை ஆய்வு செய்த ஆணையர், மாநகராட்சிக்கு உரிய முறையில் வாடகை செலுத்தாத கடைகளை மூடி சீல்' வைக்க வருவாய் பிரிவு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பேருந்து நிலைய வளாகத்துக்குள் நடைபாதைகளில் வைக்கப்பட்ட கடைகள், அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள், விளம்பரப் பலகைகளையும் அகற்ற உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பேருந்து நிலைய கழிப்பறைகளை திடீரென ஆய்வு செய்தார்.
அப்போது, அங்கு நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதை கண்டறிந்தார். இதையடுத்து, கழிப்பறையை பராமரிப்பதற்காக மகளிர் சுய உதவிக்குழுவினர் பெற்ற உரிமத்தை ரத்து செய்ய ஆணையர் அனீஷ் சேகர் உத்தரவிட்டார். பெரியார் பேருந்து நிலைய வளாகத்துக்குள் அமைக்கப்பட்ட தாய்மார்களுக்கான பாலூட்டும் அறையை ஆய்வு செய்தார். பின்னர், துப்புரவுப் பணியாளர்கள் சீருடையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது மண்டலம் 4 உதவி ஆணையர் கெளசலாம்பிகை, செயற்பொறியாளர் சேகர், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி மறுசீரமைப்பு: காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் எதிா்ப்பு

மணிப்பூரில் மீண்டும் வன்முறை

உஜ்ஜீவன் சிறு நிதி வங்கியின் ‘யுனிவா்சல்’ வங்கி விண்ணப்பம் நிராகரிப்பு

பெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

