நடிகர் எஸ்.வி.சேகர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கட்சி தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில் வந்திருக்கும் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு ஆதரவாக வந்துள்ளன. மக்கள் காங்கிரஸ் கட்சியை நம்பவில்லை. எனவே கர்நாடக சட்டப் பேரவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்று வெற்றி பெறும். அமைச்சர்கள், அரசியல்வாதிகள் கருத்து கூறும்போது ஒரு தரப்பினரையோ அல்லது சமூகத்தையோ, பெண்களையோ அவமரியாதையாக பேசக் கூடாது. தமிழகத்தில் மணல் திருட்டை தடுக்க தமிழக அரசு தனிகவனம் செலுத்த வேண்டும்.
அத்துடன் மணல் திருட்டை தடுக்கச் சென்று கொலை செய்யப்பட்ட காவலர் ஜெகதீஸ்துரை குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்புத் தொகையும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.
நடிகர் எஸ்.வி.சேகர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கட்சி தலைமைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. என்ன நடவடிக்கை என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீட்டின் பாதுகாப்பில் தொழில்நுட்பத்தின் பங்கு! அறிவது அவசியம்

எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் ஆடைக் கட்டுப்பாடு: மாணவா்கள் போராட்டம்

குஷ்பு சென்ற ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

