எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

நிதி நிறுவனம் நடத்தி ரூ.1.50 கோடி மோசடி: 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

மதுரையில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடமிருந்து வசூலித்த ரூ.1.50 கோடியை மோசடி செய்த வழக்கில் 3 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வந்தவரை, சிபிசிஐடி போலீஸார்

Updated On :14 மே 2018, 12:10 am

மதுரையில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடமிருந்து வசூலித்த ரூ.1.50 கோடியை மோசடி செய்த வழக்கில் 3 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வந்தவரை, சிபிசிஐடி போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
ராஜஸ்தானை சேர்ந்தவர் மகேந்திர ஜெயின் (40). இவர், கடந்த 2015-இல் மதுரையில் வீட்டு உபயோகப் பொருள்களை மாதாந்திர தவணை முறையில் விற்பனை செய்யும் நிறுவனத்தை தொடங்கி, விருதுநகர், ராஜபாளையம் பகுதிகளில் விற்பனை செய்து வந்தார். அப்போது, பொதுமக்களிடையே ஏற்பட்ட அறிமுகத்தை பயன்படுத்தி, நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து நிதி நிறுவனம் தொடங்கினார்.
நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக வட்டி தருவதாகக் கூறியதை அடுத்து மதுரை, விருதுநகர், ராஜபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை முதலீடு செய்தனர்.
இதன்மூலம், ரூ.1.50 கோடி வசூலான நிலையில், பொதுமக்களுக்கு வட்டித் தொகை தருவதில் இழுபறி ஏற்பட்டது. அதையடுத்து, வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை திருப்பித் தருமாறு கேட்டதால், நிதி நிறுவனம் மூடப்பட்டது. நிறுவனத்தை நடத்திய மகேந்திர ஜெயின் உள்பட 6 பேரும் தலைமறைவாகினர்.
இது தொடர்பாக முதலீடு செய்தவர்கள் அளித்த புகாரின்பேரில், பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். அதன்பின்னர், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதையடுத்து, நிறுவனத்தை நடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்த பணத்தை மகேந்திர ஜெயின் மோசடி செய்ததாகத் தெரிவித்தனர்.
சிபிசிஐடி போலீஸார் மகேந்திர ஜெயினை தேடி வந்தனர். ஆனால், அவர் தொடர்ந்து 3 ஆண்டுகளாக போலீஸாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு மகேந்திர ஜெயின் வந்திருப்பதாக சிபிசிஐடி போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், சிபிசிஐடி டி.எஸ்.பி. முத்துசங்கரலிங்கம் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று மகேந்திர ஜெயினை கைதுசெய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.