சோழவந்தான் ஜனகை மாரியம்மன் கோயில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை (மே 21) கொடியேற்றம் நடைபெறுகிறது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜனகை மாரியம்மன் கோயிலின் முக்கிய விழாவாக வைகாசித் திருவிழா கொண்டாடப்படுகிறது. திங்கள்கிழமை இரவு 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறும் இவ்விழா, ஜூன் 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, தினமும் காலை மற்றும் இரவு அம்மன் திருவீதி உலா நடைபெறும். ஒன்பதாம் திருநாளான மே 29-ஆம் தேதி நூற்றுக்கணக்கான பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம், அக்கினிச் சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அன்றைய தினம் இரவு வைகை ஆற்றில் பூப்பல்லக்கில் அம்மன் எழுந்தருளும் வைபவம் நடைபெறும். அதைத் தொடர்ந்து, மே 30-ஆம் தேதி பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில், பிற்பகல் 3 மணிக்கு கோயிலில் இருந்து அம்மன் புறப்பாடாகி மந்தைக் களத்தில் எழுந்தருள்வார். பின்னர், அங்கு பக்தர்கள் பூக்குழி இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர். அதன் பின்னர், இரவு நூதன கோ ரதத்தில் அம்மன் எழுந்தருளி கோயிலை சென்றடைவார்.
விழாவின் 16-ஆம் நாள் நிகழ்ச்சியாக ஜூன் 5-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 7.15 மணிக்கு அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளும் வைபவமும், பின்னர் காலை 8 மணிக்கு தேரோட்டமும் நடைபெறும். ஜூன் 6 ஆம் தேதி மாலை 4 மணிக்கு வைகாசித் திருவிழா கொடியிறக்கப்பட்டு, மஞ்சள் நீராடுதல் நடைபெறும். அன்றிரவு 7 மணிக்கு வைகையாற்றில் அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 10 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும், அதிகாலை 3 மணிக்கு அம்மன் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்னல் பாய்ந்ததில் விவசாயி பலி!

மத்தியப் பிரதேச படகு விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்த சோகம்!

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய... புதிய இணையதள முகவரி!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

