ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

வேன் மோதியதில் கல்லூரி மாணவர் சாவு

மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

Updated On :21 மே 2018, 11:11 pm

மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், செங்காரையைச் சேர்ந்த பாக்கியராஜ் மகன் பிரவீன் (20). இவர், மதுரை மாவட்டம், கருமாத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் பிரவீன் இருசக்கர வாகனத்தில் திருமங்கலம்-சோழவந்தான் சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியே வந்த வேன், பிரவீனின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து செக்கானூரணி போலீஸார், வேன் ஓட்டுநர் கந்தசாமி மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.