பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரி, இந்திய தேசிய லீக் கட்சியினர் மதுரை மாவட்ட ஆட்சியர் ச.நடராஜனிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
இதுதொடர்பாக மாநிலப் பொதுச் செயலர் மு.ராஜா உசேன் தலைமையில் இந்திய தேசிய லீக் கட்சியினர் அளித்த மனு:
எம்ஜிஆர் நூற்றாண்டையொட்டி 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால், பல்வேறு வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்று 15 முதல் 22 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகள் 47 பேருக்கும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகியுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கும் விடுதலை மறுக்கப்படுகிறது.
கோவை சிறையில் இருக்கும் அபு (எ) அபுதாகீர் கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் மீரான் மைதீன், இரு சிறுநீரகங்களும் செயலிழந்து உயிருக்குப் போராடி வருகிறார். 75 வயதைக் கடந்து கோவை பாஷா, 22 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்வதில் தமிழக அரசு தொடர்ந்து பாரபட்சம் காட்டி வருகிறது. நன்னடத்தை விதிகளின்படி, 10 ஆண்டுகள் கழித்த ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சாதி, மத பேதமின்றி இந்த சட்ட விதியின்படி முஸ்லிம் சிறைவாசிகளையும் விடுவிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: ஹர்மன்பிரீத் கௌர்

சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!

ஏப்.19-ல் இந்தியா வருகிறார் தென் கொரியா அதிபர்!
சித்திரை மாதப் பலன்கள் - மிதுனம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

