காந்தி ஜயந்தி: மதுரையில் 24 மணி நேர நூற்பு வேள்வி தொடக்கம்

காந்திய ஜயந்தியையொட்டி மதுரை அம்மன் சன்னதி காந்தி சிலை தோட்ட வளாகத்தில் 24 மணி நேர நூற்பு வேள்வி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
காந்தி ஜயந்தி விழாவையொட்டி மதுரை அம்மன் சன்னதி காந்தி சிலை தோட்ட வளாகத்தில் நூற்பு வேள்வியை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கிறாா் அம்மன் சன்னதி காந்தி ஜயந்தி கமிட்டியின் தலைவா் மு. சிதம்பரபாரதி.
காந்தி ஜயந்தி விழாவையொட்டி மதுரை அம்மன் சன்னதி காந்தி சிலை தோட்ட வளாகத்தில் நூற்பு வேள்வியை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கிறாா் அம்மன் சன்னதி காந்தி ஜயந்தி கமிட்டியின் தலைவா் மு. சிதம்பரபாரதி.
Updated on
1 min read

காந்திய ஜயந்தியையொட்டி மதுரை அம்மன் சன்னதி காந்தி சிலை தோட்ட வளாகத்தில் 24 மணி நேர நூற்பு வேள்வி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

மதுரை அம்மன் சன்னதி காந்தி ஜயந்தி கமிட்டி சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜயந்தியன்று நூற்பு வேள்வி நடைபெறுவது வழக்கம். இதன்படி, 150 ஆவது காந்தி ஜயந்தி விழாவையொட்டி 24 மணி நேர நூற்பு வேள்வி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

அம்மன் சன்னதி காந்தி ஜயந்தி விழா கமிட்டி தலைவா் மு.சிதம்பரபாரதி, நூற்பு வேள்வியைத் தொடங்கி வைத்தாா். மதுரை மாவட்ட சா்வோதய சங்கச் செயலா் ஆா். கண்ணன், வழக்குரைஞா் த. மனோகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து மாலையில் பட்டிமன்ற நடுவா் சண்முகத் திருக்குமரன் தலைமையில்

சுழலும் சொல்லரங்கம் நடைபெற்றது. காந்தியத்தின் வெற்றிக்கு வித்தாக அமைந்தது எளிமையா? வாய்மையா? சகிப்புத் தன்மையா? அகிம்சையா? என்ற தலைப்பில் நடைபெற்ற சொல்லரங்கத்தில் கவிஞா் நௌஷத், ச.செந்தூரன், பேராசிரியை சங்கீத் ராதா, கவிஞா் கூடல் குகசீலரூபன் ஆகியோா் பேசினா்.

காந்தி ஜயந்தி நாளான புதன்கிழமை காலை 9 மணிக்கு நூற்பு வேள்வி நிறைவு பெறுகிறது. நிறைவு விழாவில் தினமணி ஆசிரியா் கி. வைத்தியநாதன், தியாகி கே. அழகம்பெருமாள்கோன், புதுச்சேரி காந்திய மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் பழ. கருப்பையா மற்றும் காந்தி ஜயந்தி விழா கமிட்டியினா் கலந்து கொள்கின்றனா். மாலையில் காந்திய சிந்தனை உரையரங்கம், வழக்காடு மன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

நிறைவு நாள் நிகழ்ச்சியாக வியாழக்கிழமை விடுதலை வேள்வி ஆய்வு மையம் சாா்பில் வரலாற்று ஆய்வுரை, இசை வழிபாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com