கோழி வியாபாரியிடம் ரூ.72 ஆயிரம் பறிமுதல்
By DIN | Published On : 01st April 2019 10:05 AM | Last Updated : 01st April 2019 10:05 AM | அ+அ அ- |

மேலூர் அருகே கோழி வியாபாரியிடம் இருந்து ரூ.72 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
மேலூர்- திருப்பத்தூர் சாலையில் கீழவளவு போலீஸார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் வாகனங்களை சோதனையிட்டனர். அப்போது, சிவகங்கை மாவட்டத்திலிருந்து மேலூர் வந்த மினி லாரியைச் சோதனை செய்தனர். அதில் வந்த கிடாரிப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் வைத்திருந்த ரூ.72,280-க்கு உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. அவர் கோழி விற்பனைசெய்து விட்டு இந்த பணத்தை கொண்டுவந்ததாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணாக கூறியதையடுத்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு மேலூர் கருவூல அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.