"பணம் செலவழித்தாலும் அதிமுகவினர் வெற்றி பெற முடியாது'
By DIN | Published On : 01st April 2019 10:07 AM | Last Updated : 01st April 2019 10:07 AM | அ+அ அ- |

அதிமுகவினர் மக்களவை தேர்தலில் பணம் செலவழித்தாலும் வெற்றி பெற முடியாது என தேனி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் காங்கிரஸ் கட்சி தேனி மக்களவை தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற தேனி தொகுதி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுகவினர் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு ரூபாய் ஆயிரம், இரண்டாயிரம் கொடுத்தால் வாங்காதீர்கள். 5 ஆயிரம், 10 ஆயிரம் கேளுங்கள். அவர்கள் கொடுக்கும் பணம் ஊழல் பணம். அதிமுகவினர் பணத்தை செலவழித்து வெற்றி பெற எண்ணுகின்றனர். அது பலிக்காது என்றார்.