"விக்ஸ்' டப்பாவை விழுங்கிய குழந்தை சாவு
By DIN | Published On : 01st April 2019 10:06 AM | Last Updated : 01st April 2019 10:06 AM | அ+அ அ- |

மதுரையில் விக்ஸ் டப்பாவை விழுங்கிய பத்து மாதக் குழந்தை மூச்சு திணறி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.
மதுரை வைத்தியநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது 10 மாத ஆண் குழந்தை தஷ்விக்.
இந்நிலையில் குழந்தை தஷ்விக் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது விக்ஸ் டப்பாவை விழுங்கி விட்டது. இதில் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்க நிலைக்கு சென்று விட்டது.
இதனால் பெற்றோர், குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து எஸ்.எஸ்.காலனி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.