திருநகரில் விஜயகாந்த் மகன் பிரசாரம்
By DIN | Published On : 11th April 2019 09:18 AM | Last Updated : 11th April 2019 09:18 AM | அ+அ அ- |

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் மதுரை அருகே புதன்கிழமை பிரசாரம் செய்தார்.
திருநகர் 3 ஆவது பேருந்து நிறுத்தம் பகுதியில் அவர் பேசியது:
பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனை, பொலிவுறு நகர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழகத்திற்கு தந்துள்ளார். மத்தியிலும், மாநிலத்திலும் ஒருமித்த கருத்துகளை கொண்டவர்கள் ஆட்சியில் இருந்தால் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செய்ய முடியும்.
கடந்த திமுக ஆட்சியில் மதுரையில் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்டு 3 பேர் உயிரிழந்தனர். இதுபோன்ற அராஜக ஆட்சியை திமுக நடத்தியதை மக்கள் இன்னும் மறக்கவில்லை. நதிகள் இணைப்பு, விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களை தேர்தல் வாக்குறுதியாக பாஜக அறிவித்துள்ளது. எதிரணியில் யார் பிரதமர் எனத் தெரியாமல் போட்டியிடுகின்றனர். எனவே வலிமையான பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியில் அமர முரசு சின்னத்தில் வாங்களியுங்கள் என்றார்.