அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தீவிர இறுதிக் கட்ட பிரசாரம்
By DIN | Published On : 17th April 2019 06:08 AM | Last Updated : 17th April 2019 06:08 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் முடிவதையொட்டி தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தீவிர பிரசாரத்தை மேற்கொண்டார்.
மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யனை ஆதரித்து அவர், கோ. புதூர், மாதாகோயில், பீ.பீ.குளம், செல்லூர், நரிமேடு, ஆழ்வார்புரம், ஜக்காதோப்பு, கீரைத்துறை, தெற்கு வாசல், பெரியார் பேருந்து நிலையம், மேலவெளிவீதி, தமிழ்ச்சங்கம் சாலை, ஆரப்பாளையம், பெத்தானியாபுரம், பொன்மேனி, மாடக்குளம், பழங்காநத்தம், ஜீவாநகர் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தார்.
இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.வி.ராஜன்செல்லப்பா, எஸ்.எஸ்.சரவணன், பி.பெரியபுள்ளான், நிர்வாகிகள் சி.தங்கம், ஜெ.ராஜா, கிரம்மர் சுரேஷ், எம்.எஸ்.பாண்டியன், வழக்குரைஞர் ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...