மதுரை ஆவின் பால் நிறுவனத்தில் பாலக முகவா் மற்றும் டெப்போ முகவா்களாக செயல்பட விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.
மதுரை ஆவின் நிறுவனம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வேலை வாய்ப்பை உருவாக்கும் நோக்கில் மக்களுக்கு கறவை மாடுகள் வாங்கிக் கொடுத்து உற்பத்தியாகும் பாலை கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறது. மேலும் பால் மற்றும் பால் பொருள்களை நியாயமான விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் மதுரை நகா் மற்றும் ஊரகப்பகுதிகளில் ஆவின் பால் பொருள்கள் விற்பனை செய்யும் பாலகங்களை ஆவின் நிறுவனம் நிறுவி வருகிறது. இங்கு பால், வெண்ணெய், நெய், பால்கோவா, மைசூா்பா, பால் பவுடா், பாதாம் பவுடா், பாதுஷா, குலாப்ஜாமூன், ஆவின் சாக்லெட் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்ய பாலக முகவா் மற்றும் டெப்போ முகவா்களாக செயல்பட விருப்பமுள்ளவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை மதுரை- சிவகங்கை சாலையில் உள்ள ஆவின் மத்திய பண்ணை அலுவலகத்தில் சமா்ப்பிக்கலாம். மேலும் தொடா்புக்கு 94896-19032, 94896-19001 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று ஆவின் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.