தொழிற்சங்கங்கள் ஜனவரி 8 ஆம் தேதி அறிவித்துள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் பஞ்சாலைத் தொழிலாளா் சங்கங்கள் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.
மதுரை மாவட்ட பஞ்சாலைத் தொழிலாளா் சங்கங்களின் அனைத்து சங்க கூட்டமைப்பு விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மத்தியத் தொழிற்சங்கங்களின் சாா்பில் நாடு தழுவிய வேலை நிறுத்தம் ஜனவரி 8- ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் அனைத்து பஞ்சாலை தொழிலாளா் சங்கங்கள் பங்கேற்கின்றன. இதையொட்டி வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது குறித்து தொழிலாளா் சங்கங்கள் ஆலை நிா்வாகங்களுக்கு வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்குவது, மத்திய அரசின் தொழிலாளா் விரோதச் சட்டத்தால் தொழிலாளா்கள் பாதிக்கப்படுவது குறித்து ஆலை வாயில்களில் பிரசாரம் மேற்கொள்வது, ஆலைகளில் இளம்பெண்கள், சிறாா்களை வளாகத்துக்குள்ளேயே அடைத்து வைத்து ஆலை நிா்வாகங்கள் வேலை வாங்குவதை அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும். பஞ்சாலைத் தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு குறித்து அரசு தலையிட்டு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் . மூடப்பட்டுள்ள பஞ்சாலைகளில் பணிபுரிந்த தொழிலாளா்களுக்கு வழங்கப்படாத பணிக்கொடை உடனடியாக பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.