சுடச்சுட

  

  பிப்.18 முதல் வேலைநிறுத்தம்: கூட்டுறவு சங்க பணியாளர்கள் முடிவு

  By DIN  |   Published on : 12th February 2019 07:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாதபட்சத்தில் வரும் 18 ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என கூட்டுறவு பணியாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.
  இதுகுறித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர் சங்கத்தின் தென் மண்டல செயலர் ஆ.ம.ஆசிரியத் தேவன் திங்கள்கிழமை கூறியது:
  தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.25 ஆயிரம், மருத்துவப் படியை உயர்த்துவது என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
  அதைத் தொடர்ந்து மாநில செயற்குழுக் கூட்டம் கெளரவ பொதுச் செயலர்  சி.குப்புசாமி தலைமையில் மதுரையில் நடைபெற்றது. இதில் மாநிலப் பொதுச் செயலர் க.முத்துப்பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கப் பணியாளர்களின் கோரிக்கைகளை ஒரு வாரத்தில் நிறைவேற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் வரும் 18 ஆம் தேதி முதல் தொடர் விடுப்பு எடுத்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது எனத் தீர்மானிக்கப்பட்டது என்றார்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai