அனைத்து வட்டங்களிலும் இன்று "அம்மா' திட்ட முகாம்
By DIN | Published On : 04th January 2019 07:36 AM | Last Updated : 04th January 2019 07:36 AM | அ+அ அ- |

அனைத்து வட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் "அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (ஜன. 4) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.
முகாம் நடைபெறும் கிராமங்கள்: கள்ளிக்குடி- செங்கப்படை பிட் 1, மேலூர்- கொங்கம்பட்டி குரூப், உசிலம்பட்டி- நடுப்பட்டி, மதுரை கிழக்கு-
தாமரைப்பட்டி பிட் 2, வாடிப்பட்டி- கோவில் தென்கரை குரூப், திருமங்கலம் - வடகரை, மதுரை வடக்கு- காவனூர், பேரையூர்- சேடப்பட்டி குரூப், மதுரை தெற்கு- நெடுங்குளம் குரூப், மேற்கு- வடபழஞ்சி குரூப், திருப்பரங்குன்றம்- தென்பழஞ்சி குரூப்.