மதுரையில் போலி மருத்துவர் கைது
By DIN | Published On : 04th January 2019 07:36 AM | Last Updated : 04th January 2019 07:36 AM | அ+அ அ- |

மதுரையில் மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
மதுரை வண்டியூர் சௌராஷ்டிரபுரத்தில் ஒருவர் மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக மாநகராட்சி நகர் நல அலுவலர் சதீஸ்ராகவனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நகர்நல அலுவலர் சதீஸ்ராகவன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சௌராஷ்டிரபுரத்துக்குச்சென்று குறிப்பிட்ட மருத்துவமனையில் சோதனையிட்டனர். அங்கு மருத்துவர் என்ற பெயரில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த ஆனந்தனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
மேலும் மருத்துவருக்குரிய பதிவு ஆவணங்களையும் கேட்டனர். இதில் ஆனந்தன் மருத்துவர் படிப்பு படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவது தெரிய வந்தது. இதையடுத்து நகர்நல அலுவலர் சதீஸ்ராகவன் அளித்தப் புகாரின்பேரில் அண்ணாநகர் போலீஸார் வழக்குப் பதிந்து ஆனந்தனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...