மேலூர், தனியாமங்கலம், செக்கானூரணியில் ஜனவரி 5 மின்தடை
By DIN | Published On : 04th January 2019 07:41 AM | Last Updated : 04th January 2019 07:41 AM | அ+அ அ- |

மேலூர், தனியாமங்கலம், செக்கானூரணி பகுதிகளில் சனிக்கிழமை (ஜன. 5) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை கிழக்கு மின் பகிர்மாந வட்ட செயற்பொறியாளர் இரா.கண்ணன் தெரிவித்திருப்பதாவது: மேலூர், தனியாமங்கலம் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (ஜன. 5) நடைபெறவுள்ளன. எனவே, அன்று காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடைப்படும்.
மின்விநியோகம் தடைபடும் பகுதிகள் விவரம்: மேலூர், தும்பைப்பட்டி, நாவினிப்பட்டி, வண்ணான்பாறைப்பட்டி, பதினெட்டாங்குடி, திருவாதவூர், கொட்டகுடி மற்றும் பனங்காடி.
தனியாமங்கலம், பெருமாள்பட்டி, சருகுவலையபட்டி, கீழையூர், கீழவளவு, இ.மலம்பட்டி, கொங்கம்பட்டி, செம்மினிப்பட்டி, முத்துச்சாமிபட்டி, உறங்கான்பட்டி, வெள்ளலூர், தர்மசானப்பட்டி, கோட்டநத்தம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகள் என அவர் தெரிவித்துள்ளார்.
செக்கானூரணியில்: மின்வாரியத்தின் செக்கானூரணி செயற்பொறியாளர் வி.ஆதிலெட்சுமி தெரிவித்திருப்பதாவது:
செக்கானூரணி துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை (ஜன. 5) பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே அன்று காலை 9 முதல் பகல் 2 மணி வரை செக்கனூரணி, கே.புளியங்குளம், பன்னியான், கிண்ணிமங்கலம், மாவிலிப்பட்டி, மூனாண்டிபட்டி, ஆ.கொக்குளம், கருமாத்தூர், கண்ணனூர், சாக்கலிப்பட்டி, கோவிலாங்குளம், பூச்சம்பட்டி, ஜோதிமாணிக்கம், வடபழஞ்சி, தென்பழஞ்சி, பல்கலை நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.