மதுரையில் கடைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய பெண்ணிடம் புதன்கிழமை இரவு 10 பவுன் நகையை மர்ம நபர் பறித்துச் சென்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை விஸ்வநாதபுரம் சென்ட்ரல் பேங்க் காலனியைச் சேர்ந்த வேல்முருகன் மனைவி தேவி (32). இவர் அப்பகுதியில் உள்ள கடைக்குச் சென்று விட்டு வீட்டுக்கு புதன்கிழமை இரவு நடந்து சென்றார். அப்பகுதியில் உள்ள குடும்பக் கட்டுப்பாட்டு மையம் வழியாக நடந்து சென்றபோது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் தேவி அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து தேவி அளித்தப் புகாரின்பேரில் தல்லாகுளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.