வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா

பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 260 ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. 
Updated on
1 min read

பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 260 ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. 
 தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகம் அறக்கட்டளை சார்பில்  நடைபெற்ற  நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் எஸ்.நேரு தலைமை வகித்தார். கல்லூரி  செயலர் எம்.விஜயராகவன்,  பொருளாளர் எல்.கோவிந்தராஜன், துணைத்தலைவர் இரா.ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. எஸ்.பீட்டர் அல்போன்ஸ் சிறப்புரையாற்றினார். இதில் பேராசிரியர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக வரலாற்றுத்துறைத்தலைவர் உமா வரவேற்றார். பேராசிரியர் ஆர்.பிறையா நன்றி கூறினார்.   
இதன் பின் முன்னாள் எம்.பி. எஸ்.பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களிடம் கூறியது: திருவாரூர் இடைத்தேர்தலில்  கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு திமுக வெற்றி பெறும். 
  மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு காமராஜர் பெயர் வைக்க மத்திய,மாநில அரசுகள் பெருந்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும். மக்களவையில் ராகுல்காந்தியின் பேச்சை திசை திருப்பவே பாஜக துண்டுதலால் அதிமுகவினர் அமளியில் ஈடுபடுகின்றனர் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com