அரசு ஊழியர் சங்கத்தினர் தர்னா
By DIN | Published On : 03rd July 2019 08:39 AM | Last Updated : 03rd July 2019 08:39 AM | அ+அ அ- |

அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை தர்னா போராட்டம் நடத்தினர்.
அண்ணா நகர் வைகை காலனி பகுதியில் நடந்த இப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சு.ஜெயராஜராஜேஸ்வரன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலர் தெய்வராஜ் தர்னாவைத் தொடக்கி வைத்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் க.நீதிராஜா, மாநிலத் தலைவர் (பொறுப்பு) ஆ.செல்வம், மாவட்ட பொருளாளர் மு.ராம்தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
"ஜாக்டோ- ஜியோ' போராட்டத்தில் தீவிரமாகச் செயல்பட்டதற்காக, அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவரான மு.சுப்பிரமணியன் ஓய்வு பெறும் நாளில் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராகவும், தமிழக அரசு ஊழியர்களின் பணியமைப்பு விதிகளுக்கு எதிராகவும் பணி ஓய்வு நாளன்று வழங்கப்பட்ட பணிஇடைநீக்க உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தர்னா போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.