4ஜி சேவை: பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 03rd July 2019 08:39 AM | Last Updated : 03rd July 2019 08:39 AM | அ+அ அ- |

பிஎஸ்என்எல்-க்கு 4ஜி சேவை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதன் ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிஎஸ்என்எல் அரசு நிறுவனத்துக்கு தற்போது வரை 4ஜி சேவை வழங்கப்படவில்லை. மற்ற நிறுவனங்கள் 5ஜி சேவை வரை வழங்கிவரும் நிலையில், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தனியார் செல்லிடப்பேசி நிறுவனங்களுக்கு மாறி வருகின்றனர். இதனால் பிஎஸ்என்எல் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே விரைவில் பிஎஸ்என்எல்-க்கு 4ஜி சேவை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மதுரை மாவட்ட பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம், தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் சார்பில், தல்லாகுளம் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பல மாதங்கள் ஊதியம் வழங்கப்படாமல் இருக்கிறது. அதை உடனடியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும், ஜூலை 4 வரை போராட்டம் நடத்தப்படும் எனவும் சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.